டெல்லி: தென்கொரியாவில் பாகிஸ்தான் ஆதரவாளர்களுடன் பாஜக நபர் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியோலில் மோடி எதிர்ப்பு முழக்கம்! ஆர்ப்பாட்டக்காரர்களை தனி ஆளாக தெறிக்க விட்ட ஷாஜியா இல்மி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் அது சார்புடைய நபர்கள் இந்தியாவிற்கு, குறிப்பாக, பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பாக, பாஜகவைச் சேர்ந்த பெண் தலைவர் ஷாஜியா இல்மி உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாநாடு நடைபெற்றபோது, அங்கே வந்த பாகிஸ்தானியர்கள் சிலர் கொடிகளை பிடித்தபடி, இந்தியாவிற்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக, ஷாஜியா இல்மி உள்ளிட்ட பாஜக.,வினர் மாநாட்டு அரங்கை விட்டு வெளியே வந்து, போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களை எதிர்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.'இது எங்களது உள்நாட்டு விசயம், இதில் தலையிடவும், எங்கள் தலைவர் மோடியை விமர்சிக்கவும் யாருக்கும் உரிமையில்லை,' என்று கூறி அவர்கள் வாக்குவாதம் செய்யதார்.
அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை சிலர் வீடியாவாக பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், இவ்விசயம் தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது நாடு திரும்பியுள்ள ஷாஜியா இல்மி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''சில நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக தவறான கருத்துகள் பரப்புவதை பலரும் வாடிக்கையாகச் செய்கின்றனர்.
அத்தகைய நபர்களை சந்திக்க நேரிட்டால், நமது எதிர்ப்பை அமைதியான முறையில் பதிவு செய்வதை கடமையாக நினைக்கிறோம். அதனையே தென்கொரியாவில் செய்தோம்,'' என்று தெரிவித்தார்.