மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மேற்குவங்கம்! காவிக்கொடியை பறக்க விட்ட மோடி! டென்சனில் மம்தா!
7 கட்டமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மம்தா தலைமையிலான திரிணாமுர் காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் திரிணாமுர் காங்கிரஸ் 34 தொகுதிகளை வென்றது. கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக கட்சியினர் இந்த முறை 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது மம்தாவிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.