ரஜினி விரைவில் ஜெயிலுக்குப் போவார்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி திடுக் தகவல்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், ஜெயிலுக்குப் போவது உறுதி என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி எச்சரித்துள்ளார்.


அடிக்கடி எதாவது சர்ச்சைகளை கிளப்பும் நபர் சுப்பிரமணிய சுவாமி. இவர், சமீபத்தில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, அரசியலுக்கு ரஜினி வரும்பட்சத்தில் அவர் சிறைக்கு தள்ளப்படுவது உறுதி என்று கூறியுள்ளார். 

வரும் 2021ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபடுவது உறுதி, என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு அரசியலுக்கு வந்தால், ரஜினி சிறைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சுப்பிரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ளார். 

அதேசமயம், ரஜினி மீது என்ன புகார் உள்ளது என்பது பற்றியும், அவர் எதற்காகச் சிறை செல்ல நேரிடும் என்பது பற்றியும் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.