தினகரனை இழுக்க முடியலைன்னா வீட்டுக்குப் போங்க! தமிழிசையிடம் பொங்கிய பாஜக தலைமை!

தினகரனை எப்படியாவது அ.தி.மு.க.வில் இணைய வைத்துவிடலாம் என்று நினைத்திருந்த பா.ஜ.க. மேலிடம் பலத்த தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த முயற்சியை மேற்கொண்ட தமிழிசைக்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.


கட்டாயக் கல்யாணம் போன்று அ.தி.மு..வை தங்கள் கூட்டணியில் இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறது பா... விருப்பமே இல்லாவிட்டாலும் எடப்பாடியும் பன்னீரும் அமைதியாக கூட்டணி விவகாரத்தை டீல் செய்துவருகிறார்கள். தம்பித்துரை பொங்குவதும், ஜெயக்குமார் விட்டேத்தியாகப் பேசுவதும் முடிந்தவரை கூட்டணியைத் தள்ளிப்போட வேண்டும் என்ற திட்டம்தான்.

அதேநேரம், எப்படியாவது தினகரனை அ.தி.மு..வுடன் இணைத்துவிட வேண்டும் என்ற பொறுப்பு தமிழக பா... தலைவர் தமிழிசையிடம் கொடுக்கப்பட்டது.  அவரும் அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும் தினகரன் மனதைக் கரைக்க முடியவில்லை. இரண்டு முறை தினகரனை தனியே சந்தித்துப் பேசியும் எதுவும் நடக்கவில்லையாம்.

ஏனென்றால் தினகரன் கோரிக்கைகள் இரண்டுதான். முதலில் எடப்பாடி பதவி விலக வேண்டும். அடுத்தது பன்னீரை கட்சியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டும் நடக்காது என்பதும் தினகரனுக்குத் தெரியும். அதனால்தான் இப்படியொரு கோரிக்கையை வைத்தார் என்று சொல்கிறார்கள்.

செங்கோட்டையனை முதல்வராக்கலாமா என்று கேட்டதற்கும் தினகரன் நோ சொல்லிவிட்டாராம். நான் சொல்லும் நபர்தான் முதல்வராக வருவார். யார் என்பதை நான் முடிவு செய்கிறேன். எடப்பாடி வீட்டுக்குப் போவதாக சொன்னால் இணைப்பு குறித்துப் பேசலாம் என்று விடாப்பிடியாக நின்றுவிட்டாராம்..

தினகரனை வேறு மாதிரியாக மடக்குவதற்காக,  சமீபத்தில் சசிகலா சிறை அறிக்கை வெளியிடப்பட்டு, அவருக்கு கொஞ்சம் நெருக்குதல் கொடுக்கப்பட்டது. ஆனால், சசிகலா சொல்வதைக் கேட்கும் நிலையிலும் இப்போது தினகரன் இல்லையாம். அடுத்து 2021ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது அ..மு.. தனிப்பெரும் சக்தியாகத் திகழும். அப்போது நான் போட்டியிட்டு முதல்வராகிக் கொள்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

கட்சிப் பதவி அல்லது மத்திய மந்திரி பதவி போன்ற எதையும் ஏற்றுக்கொள்ள தினகரன் தயாராக இல்லை என்று தமிழிசை டெல்லி மேலிடத்துக்கு தகவல் அனுப்பினாராம்.. மோடி வரும்போது கூட்டணி முடிவாகி இருக்கும் என்று நினைத்த டெல்லி தலைமை கடுப்பாகி திட்டி தீர்த்துவிட்டதாம்.

இதைக்கூட செய்யமுடியவில்லை என்றால் எதற்காக கட்சிக்கு தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். வேறு எவரிடமாவது கொடுத்து விஷயத்தை முடித்திருப்போம் என்று பொங்கியே விட்டதாம். ஆளும் கட்சிக்கு பா... கொடுத்துவரும் குடைச்சலைக் கண்டு ரசித்துவருகிறாராம் தினகரன்.