உபி.,யில் பாஜகவின் 44 தொகுதிகள் அவுட்! மோடியின் தூக்கத்தை கெடுக்கும் கூட்டணி கணக்கு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில், 40 சீட்களை பாஜக இழக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி மிகப்பெரும் சீட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக, பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே, பாஜக.,வுக்கு 190 மக்களவை தொகுதிகள் கிடைத்தன. இம்மாநிலங்களில் மொத்தமே 225 மக்களவைத் தொகுதிகள்தான் உள்ளன. இதன்மூலமாக, ஆட்சியை கைப்பற்றுவது பாஜக.,வுக்கு எளிதான விசயமாக அமைந்தது.

ஆனால், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில், இந்த மாநிலங்களில் பாஜக.,வுக்கு பெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே, சுமார் 44 தொகுதிகள் வரை பாஜக இழக்க நேரிடும் என தி வொயர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில், பாஜக.,வின் வெற்றியை பாதிக்கக்கூடிய கூட்டணியாக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியால், பாஜக.,வின் வெற்றி கணிசமான அளவுக்கு பாதிக்கப்படும் என்றும், பாஜக.,வுக்கு கிடைக்கும் வாக்கு விகிதம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.