இடைத்தேர்தல் வன்முறை! பாஜக வேட்பாளரை அடித்து உதைத்து புரட்டி எடுத்த ஆளும் கட்சியினர்! பரபரப்பு வீடியோ உள்ளே!

பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்திருப்பது மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க மாநிலத்தில் காளியாகஞ்ச், காரக்பூர் சதார் மற்றும் கரிம்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரிம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜாய் பிரகாஷ் என்பவர் அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஆவார். இன்று காலை இவருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

வாக்குவாதங்கள் முற்றி போனதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜாய்பிரகாஷை அடித்துக் கீழே தள்ளி உள்ளனர். அதன் பின்னர் அவரை எட்டி உதைத்துள்ளனர். இதில் தாய் பிரகாஷ் தன்னிடமிருந்த செல்போனை கீழே தவற விட்டுள்ளார். ஒருவழியாக மேலே எழுந்து தன்னை நிலைப்படுத்தி கொண்டுள்ளார்.

உடனடியாக பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். உடனடியாக அனைவரும் கலந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சியை வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.