சூர்யா, கார்த்தி மீது பா.ஜ.க. பாய்ச்சல்.. ஏன்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கல்விக்கு ஒரு பிரச்னை என்றால் சூர்யா குரல் கொடுப்பது போன்று, விவசாயத்துக்கு ஒரு பிரச்னை என்றதும் கார்த்தி குரல் கொடுத்தார். உடனே பா.ஜ.க.வினர் அவர்கள் மீது பாய்கிறார்கள்


இதுகுறித்து ஜெயதேவன் பதிவு இது. நடிகர் சிவகுமார் குடும்பம் நாத்திக குடும்பம். அல்ல. சிவக்குமார் சிறந்த ஆன்மீக பேச்சாளர். மகா பாரதம், இராமயணத்தை கரைத்துக் குடித்தவர். ஆனால் கோவில்களில் பணம் உள்ளவனுக்கு தரும் சிறப்பு மரியாதை பற்றி ஒரு முறை பேசினார். சர்ச்சை ஆனது. போலி பக்தியை எப்போதும் விமர்சிப்பவர்.....ஜோதிகா தமிழர் அல்ல என்றாலும் தஞ்சை கோவிலை பார்த்து விட்டு, எதிரே இருந்த மருத்துவமனை அவல நிலை பற்றி பேசி சர்ச்சை ஆனது. கடவுளுக்கும் செய்யுங்கள். மனிதர்களுக்கும் செய்யுங்கள் என்பதே சாரம்...

சூர்யாவுக்கு அறிமுகம் தேவை இல்லை. அகரம் அறக்கட்டளையே பதில் சொல்லும்...புதிய கல்விக் கொள்கை பற்றி கடுமையாக எதிர்வினை ஆற்றிய கலைஞன்..

சுற்றுச் சூழல் , வேளாண்மைக்கு ஒரு அமைப்பை வைத்துள்ளவர் கார்த்தி. இவர்கள் வசதியான குடும்பம். பெரிய சமூகப் பிண்ணனியும் உள்ளவர்கள் இவர்கள்.... ஆனால் இதுவரை அரசியலுக்கு வருவதாக ஒரு நிழல் செய்தி கூட இல்லை....மனிதர்களை ,

இயற்கையை நேசிக்கின்றனர். அவ்வளவே...அவர்கள் மேற்கண்ட அரசின் கொள்கைகளை விமர்சிக்க தகுதி உள்ள குடும்பம். ஆனால் அவர்கள் கருத்துக்கு குதி குதி என சங் அன் கோ குதிக்கின்றனர்...காரணம் உண்மையை சொல்பவன் அவர்களுக்கு பிடிக்காது.

சூர்யா குடும்பம் சொன்னால் மக்கள் மனதில் எடுபடும் எனத் தெரியும்... அதிலும் கார்த்தி சொன்ன இயற்கை பேரழிவு தொடர்பான கருத்து விவசாயிகளிடம் எடுபடும்...குறிப்பாக வேளாண்மை பிரதான தொழிலான கொங்கு மண்டலத்தில் ஒரு impact உருவாக்கும் என அச்சம்

அரசியல் கட்சிகள் பேச வேண்டிய பலவற்றை. இவர்கள் பேசுகின்றனர்.....அதுதான் சங் அன்கோ பதறுகிறது இவர்கள் கோபம் என்பது மக்களின் கோபம் என பி.ஜே.பி.க்கு புரிந்தால் நல்லது. இல்லையெனில் காலத்திடம் விரைவில் பாடம் கற்றுக் கொள்வார்கள்..