அதிமுகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று நடிகர் விஜய்யின் ரசிகை போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்.
அதிமுகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம்! விஜய் ரசிகை அடித்து ஒட்டிய தெறி போஸ்டர்!

விருதுநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் ஜெகதீஸ்வரி. இவர் தனது வீட்டு வாசலில் அதிமுகவினர் எங்கள் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று ஒரு போஸ்டர் ஒட்டி உள்ளார். மேலும் இது விஜய் ரசிகை வீடு இங்கு அதிமுகவினருக்கு வேலை இல்லை என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும் சில விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் இதே போன்றதொரு போஸ்டர்களை ஜெகதீஸ்வரி ஓட்டி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சர்க்கார் படத்தின் போது நடிகர் விஜய்க்கு எதிராக அதிமுகவினர் நடந்து கொண்டது தன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக விஜய் ரசிகையான தனது வீட்டிற்கு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் யார் வீட்டிற்கும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என அதிமுகவினரை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டி உள்ளதாக ஜெகதீஸ்வரி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டரை கைகளில் வைத்துக்கொண்டு ஜெகதீஸ்வரி கொடுத்துள்ள போட்டோ post வைரலாகி வருகிறது.