மாஸ் ஹீரோ என்றால், அது எடப்பாடி பழனிசாமிதான். பா.ஜ.க. வியந்து பாராட்டும் ஆளுமை.

முதல்வர் வேட்பாளரை இன்னமும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய அதே பா.ஜ.க. இன்று எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைப் பாராட்டி, கூட்டணியை உறுதி செய்திருப்பதுதான் வரலாற்றுச் செய்தி.


ஆம், மிகச்சிறந்த ஆளுமை என்று எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இப்படி புகழ்ந்து பேசியிருப்பது, அதிமுகவில் உற்சாக அலைகளை உருவாக்கியுள்ளது. 

 ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியை எடப்பாடி கட்டிக்காத்துவரும் விதம் எனக்கே ஆச்சரியமளிக்கிறது என்று ஜே.பி. நட்டா புகழ்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். ஏனென்ராஅல், ஜெயலலிதா மறைவை அடுத்து முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்றுக் கொண்டபோது பலரும் அவரை ஏளனமாகவே பார்த்தனர். 

அதிகபட்சம் ஒரு மாதம் தாக்குப் பிடித்தால் ஆச்சரியம் என்றுதான் ஆருடம் கணித்தனர். போதாதக் குறைக்கு கட்சிக்காரர்கள் மத்தியிலும் கடும் குழப்பம் நிலவியது. ஆனால், தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை உணர்த்தி அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து தமிழகத்தை நம்பர் ஒன் என்ற நிலைக்கு உயர்த்திவிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழக மக்களின் மனங்களில் மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் எடப்பாடி என்று சொன்னால் மிகையில்லை.