தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் மீது பா.ஜ.க. அவதூறு, காரணம் தெரியுமா?!

கடந்த 2015 வெள்ள நேரத்தில் புயல், மழை நிலவரங்களை துல்லியமாகச் சொல்லி தமிழக மக்களிடம் அறிமுகமானவர் ப்ரதீப் ஜான். ஆனால், அவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் மற்றும் கொடூர விமர்சனங்கள் எழுந்துள்ளன.


மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே, இவர் மீது வன்மம் கக்குவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்துக்களுக்கு எதிர்ப்பாகவே குற்றம் சாட்டுவதாகக் கூறிவருகின்றனர். குறிப்பாக அத்திவரதர் வெளியே வந்த தருணத்தில் போதிய மழை பெய்யவில்லை என்று துல்லியமாக அட்டவணை வெளியிட்டதில் பா.ஜ.க.வினர் கடுப்பானதாக சொல்லப்படுகிறது.

ஒருவன் இந்து அல்லாத மாற்று மதத்தை சேர்ந்தவன் என்று அறிந்தாலே அவன் மீது வன்மத்தோடு தாக்குவதை பா.ஜ.க.வினர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று தாக்கியது முதல், மாற்று மதத்தினர் என்றாலே அவர்கள் மீது விழுந்து பிறாண்டுவது சங்கிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. இதுதான் இவர்களின் இயல்பான குணம். அவர்கள்தான் இப்போது ப்ரதீப் ஜான் மேட்டரையும் கையில் எடுத்து மிரட்டி வருகின்றனர்.

இத்தனைக்கும் அவர், ‘நான் அத்திவரதர் குறித்து எந்த பதிவும் போடவில்லை, கிறிஸ்தவன் என்பதைக் காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூட தெரிவிப்பதில்லை’ என்று கூறியும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வன்முறையில் இறங்குவதாகக் கூறியிருக்கிறார்.

வானிலை நிலவரத்தை எல்லோரும் கேட்கும் வகையில் வெளியிட்டு வரும் ப்ரதீப்புக்கு பொதுவானவர்கள் கை கொடுக்கவேண்டிய நேரம் இது.