பாஜக எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்.பி! வைரல் வீடியோ!

பாஜக எம்எல்ஏவை அக்கட்சியின் எம்பி ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபீர் நகரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக எம்பி சரத் திரிபாதி கலந்து கொண்டார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ராகேஷ் பாகலும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரசு விழாக்களில் தனது பெயரை ஏன் போடுவதில்லை என்று எம்பி சரத் திரிபாதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு யார் பெயரை வெளியிடுவது யார் பெயரை தவிர்ப்பது என்பது தனது முடிவு என்று எம்எல்ஏ ராகேஷ் கூறினார். இதனால் கோபம் அடைந்த எம்பி சரத் திரிபாதி தனது கால்களில் இருந்து செருப்பை கழட்டினார்.

பின்னர் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த செருப்பை வைத்து எம்.எல்.ஏவை விளாசு விளாசு என விளாச ஆரம்பித்துவிட்டார். முதலில் நிலைகுழைந்த எம்.எல்.ஏ பிறகு சுதாரித்துக் கொண்டார்.

நேராக தன்னை அடித்த பாஜக எம்பியிடம் சென்ற அந்த பாஜக எம்.எல்.ஏ தனது பலம் கொண்ட மட்டும் அவரை தாக்க ஆரம்பித்தார். பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் முன்னிலையில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதனை நீங்களும் பாருங்கள்