நீ முஸ்லீமா டா..! இந்த பக்கம் வியாபாரத்துக்கு வந்த..! காய்கறி வியாபாரியை அடித்து விரட்டிய பாஜக எம்எல்ஏ! அதிர வைக்கும் சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவரை காய்கறிகளை விற்க விடாமல் தடுத்து அங்கிருந்து விரட்டிய சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோர தாண்டவத்தை பாகுபாடின்றி பல நாடுகளுக்கும் பகிர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில் நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்முடைய நாடு முழுவதும் வேகமாக இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக தள்ளு வண்டிகள் மூலம் விற்பனையாளர்கள் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம் என அரசாங்கம் உத்தரவிட்டது. 

இதன் அடிப்படையில் விற்பனையாளர்கள் தள்ளுவண்டிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்து வருகின்றனர். பாஜக கட்சியின் எம்.எல்.ஏ., திரு. ராஜ்புத், தன்னுடைய வீட்டு வாசலில் காய்கறிகளை விற்பனை செய்ய வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அவருடைய மகனை அங்கிருந்து விரட்டி அடித்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ., திரு ராஜ்புத் அவர்களிடம் கேட்ட பொழுது அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று கூறி அதற்கான விளக்கத்தையும் அழைத்திருந்தார்.

திரு ராஜ்புத் கூறிய அந்த விளக்கத்தில், ஆம், இது எனது வீடியோ. அவர் பொய் சொன்னதால் நான் அவரைக் கண்டித்தேன். அவர் தனது பெயர் ராஜ்குமார் என்றும், அவரது மகன் பெயர் ரெஹ்முதீன் என்றும் கூறினார். அவர் முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணியவில்லை. இதுவரை கான்பூரில் 16 காய்கறி விற்பனையாளர்களுக்கும், லக்னோவில் ஒருவருக்கும் கோவிட் -19 தொற்று உறுதியானது நாம் அனைவரும் அறிவோம், ” என்றார். 

ஆனால் அந்த காய்கறி விற்பனையாளர் உண்மையில் முகமூடி அணிந்து இருந்தார். என்னிடம் உண்மையை சொல். உங்கள் பெயர் என்ன, ”என்று எம்.எல்.ஏ இந்த காய்கறி விற்பனையாளரிடம் கேட்கிறார். அதற்கு அவர் தன்னுடைய பெயர் ராஜ்குமார் என்று பதில் அளிக்கிறார். இல்லை, அது உங்கள் பெயர் அல்ல. எங்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், ”என்று திரு.ராஜ்புத் வலியுறுத்துகிறார். காய்கறி விற்பனையாளர் மீண்டும் மீண்டும் தன்னுடைய பெயர் ராஜ்குமார் என்று கூறுகிறார். உன்னுடைய உண்மையான பெயரை நீ சொல்லவில்லை என்றால் அவ்வளவுதான் என்று திரு ராஜ்புட் காய்கறி விற்பனையாளரை கண்டிக்கிறார்.

இதனால் பயந்த விற்பனையாளர் மற்றும் அவரது மகன் அங்கிருந்து தப்பி ஓட பார்க்கின்றனர். உடனே அதற்கு திரு. ராஜ்புத் எதற்காக இங்கிருந்து தப்பி ஓடப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். எம்.எல்.ஏ கடைசியாக காய்கறி வண்டியை ஓட்டி வந்த நபரின் மகனை விசாரிக்கிறார். மகனே நீயாவது உண்மையை சொல் ..உன் தந்தையின் பெயர் என்ன ? என்று கேட்கிறார். உடனே அந்த சிறுவன் மிகுந்த பயத்தோடு தன்னுடைய தந்தை பெயர் அஜீஸ் உர் ரஹ்மான் என்று கூறினான்.

இதைக் கேட்ட திரு. ராஜ்புட், கோபத்தால் வெறுப்பு நிறைந்த வார்த்தைகள் மூலம் அவர்களை திட்டி தீர்க்கிறார். விற்பனையாளரின் மகன் அரசியல்வாதியிடம் அவர்களை செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சுகிறார், "நாங்கள் இனி இந்த மாதிரி செயலில் மீண்டும் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்தனர். பிறகு அவர்கள் அங்கிருந்து ஓடி விடுகின்றனர். நீங்கள் மீண்டும் இந்த பகுதியில் காணப்படக்கூடாது. நாங்கள் உங்களைப் பார்த்தால், நாங்கள் சரியான பாடத்தை கற்பிப்போம் என்று திரு. ராஜ்புத் அவர்களுக்குப் பின் கத்துகிறார்.

சமீபத்தில்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இம்மாதிரியான இனம் சார்ந்த பிளவு நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என வன்மையாக கண்டித்தார். அவர் கண்டித்து நடைபெற்ற இரண்டாவது செயல் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த செவ்வாயன்று, பாஜக கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ., சுரேஷ் திவாரி, கீரை விற்பனையாளர்களை பற்றிய தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அவர் கூறிய கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதில் "ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். அனைவருக்கும் வெளிப்படையாகச் சொல்கிறேன். 'மியாஸ்' (முஸ்லிம்களிடமிருந்து) காய்கறிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. " என்று கூறினார்.

பின்னர் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்ட பொழுது முஸ்லிம் விற்பனையாளர்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளின் மீது தங்களுடைய எச்சிலை துப்பி விற்பனை செய்கிறார்கள் என்று தவறான கருத்தைப் பதிவு செய்தார். இதுகுறித்து போலீசார் இது முற்றிலும் பொய்யான வதந்தி என கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.