கடமையை செய்து அதிகாரிக்கு கிரிக்கெட் பேட்டால் அடி! உதை! BJP எம்எல்ஏ அட்டூழியம்!

அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரியை பாஜக எம்எல்ஏ கிரிக்கெட் மட்டையால் அடித்து இருப்பது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் சட்டமன்ற தொகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்புகள் நடப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுக்கும் வகையில் அங்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய். இவர் பிரபல பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான விஜய் வர்கியா என்பவரின் மகனாவார்.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு விரைந்த ஆகாஷ் விஜய் அந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆகாஷ் விஜய் கிரிக்கெட் மட்டையால் அந்த அதிகாரியை தாக்கியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள் பதிவு செய்துக் கொண்டிருந்த போதே இந்த அராஜகத்தை ஆகாஷ் விஜய் செய்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநில முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹித்தேஷ் பஜ்பாய், அதிகாரி ஆகாஷிடம் லஞ்சம் கேட்டதாலேயே அவரை ஆகாஷ் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.