பா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.

இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று மனுதர்மம் என்னும் சனாதனமே கூறியிருக்கிறது. அதுபற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல்


இதுபோன்ற அவதூறுகளுக்கு அஞ்சேல்! அணிதிரள்! ஆர்த்தெழு! ஆணாதிக்கம் அறுத்தெறி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திருமாவளவன். இதையடுத்து மனு தர்மத்துக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார்.

காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி.. 24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்.. தமிழ் நாடெங்கும் விசிக_ஆர்ப்பாட்டம் அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்! ஆயிரம் தலைமுறை இழிவைத் துடைப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு பெரியார் கழகத்தினர் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.