மஹாராஷ்த்ரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மராட்டியம்! பாஜக – சிவசேனா கூட்டணியின் மேஜிக்!
7 கட்டமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலமான மஹாராஷ்த்ரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி மஹாராஷ்த்ரா மாநிலத்தில் மேஜிக் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது. இதனால் பாஜக வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போதய நிலவரப்படி பாஜக 340கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.