பிக் பாஸ் 3 எப்போது முதல் ஒளிபரப்பாகப் போகுது தெரியுமா?

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.


இந்நிகழிச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் முந்தய 2 சீசன்களை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த மூன்றாவது சீசனையும் இவரே தொகுத்து வழங்க போகிறார் என்று கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியை பற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. வரும் ஜூன் மாதம் 23 -ஆம்  தேதி முதல் பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற செய்தி பரவி வருகிறது.  ஆனால் இதுவரை எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியீடப்படவில்லை.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் போட்டியை வென்றனர். 100 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியானது கடந்த ஆண்டு 105 நாட்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடைபெறும். சினிமா துறையில் சாதிக்க விரும்பும் ஒவொருவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றே கூறலாம்.