உலககோப்பை இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்! அதிரடியாக நீக்கப்பட்ட அம்படி ராயுடு, ரிஷாப் பாண்ட்!

உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த அணியின் அதிரடியாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் இடம் பெற்றுள்ளனர்.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற மே மாதம் 30 ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்கான அணியை இன்று காலை ஆஸ்திரேலியா அணி அறிவித்தது. இந்நிலையில் பிசிசிஐ வ உலகக்கோப்பைக்கான இந்திய அணியை   அறிவித்து உள்ளது . இந்த அணியில் இளம் வீரர் ரிஷாப் பாண்ட் மற்றும் அம்பட்டி ராயுடு ஆகியோர் இடம் பெறவில்லை. இடம் பெறுவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி விவரம் இதோ :

1. விராட் கோஹ்லி (கேப்டன்) 2. ரோஹித் சர்மா (துணை கேப்டன் ) 3. ஷிகர் தவான்  4. கேதார்  ஜாதவ் 5. ஹார்டிக் பாண்டியா 6. டோனி 7. ஜடேஜா 8. ஷமி 9. குல்தீப் யாதவ் 10. சஹால் 11. பும்ரா 12. புவனேஸ்வர் குமார் 13. தினேஷ் கார்த்திக் 14. விஜய் ஷங்கர் 15. லோகேஷ் ராகுல்