27 வயதில் திடீர் மரணம்..! உலகை அதிர வைத்த பெண் பத்திரிகையாளர் ஹன்னா!

லண்டன்: பிபிசி பெண் நிருபர் ஹன்னா யூசுப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பிரிட்டிஷ் - சோமாலியா வம்சாவளியை சேர்ந்த ஹன்னா யூசுப், கோஸ்டா காஃபி நிர்வாகத்திடம்  முறையான பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய உடல்நலக் குறைவு விடுமுறை பெற்று தந்தார். மேலும், பெண்கள் பர்தா அணிவதை ஆதரித்துப் பேசினார். பிரிட்டன் மற்றும் சோமாலியா பத்திரிகையாளர்களிடையே சிறப்பான கவனம் பெற்றவராக வலம்வந்த ஹன்னா யூசுப், 27 வயதில் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் சக பத்திரிகையாளர்களை கவலையடைய செய்துள்ளது. பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகஊடகங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரிட்டிஷ்-சோமாலியா மரபில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளராக தங்களது மகள் வலம் வந்தார் என, ஹன்னாவின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பிபிசி நிருபர்கள், செய்தி தொகுப்பாளர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிபிசி நியூஸ் வெப்சைட்டில் பணிபுரிந்த ஹன்னா, இதற்கு முன் தி கார்டியன், தி இன்டிபென்டன்ட் மற்றும் தி டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் பணிபுரிந்தவர் ஆவார்.