திருமணம் நிச்சயம்..! ஒரு வாரத்தில் கல்யாணம்! நடு வீட்டில் சடலமாக தொங்கிய 24 வயது இளம் பெண்! மதுரை பரபரப்பு!

திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள பல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவனுடைய மகளின் பெயர் செல்வி. செல்வியின் வயது 24. இவர் இளங்கலை பட்டம் பெற்றவராவார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு மில்லில் செல்வி பணியாற்றி வந்துள்ளார். குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்பதால் இவருடைய சம்பளம் தான் குடும்பம் நடத்துவதற்கு உதவியாக இருந்தது.

இந்நிலையில் செல்விக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டாரும் குமாரப்பட்டிக்கு வந்து, செல்வியை பார்த்து விட்டு சென்றனர். இந்நிலையில் தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்த செல்வி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு துப்பட்டாவால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செல்வி தூக்கில் தொங்கி இறந்ததை கண்ட அவருடைய பெற்றோர், உடனடியாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் செல்வியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது குமாரப்பட்டியில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.