விஜய் டிவி ஆயுத எழுத்து சீரியலில் நடிகை ஸ்ரீத்து வெளியே..! நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா உள்ளே! காரணம் இது தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஸ்ரீத்து விலகி விட்டார்


கடந்த 2012-ம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘7-சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீத்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த சீரியலில், சப் கலெக்டராக நடித்து வந்த இவர் தற்போது இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார் . இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் தான் நடிகை ஸ்ரீரித்துவுக்காக சமூக வலைத்தள வாசிகள் பல மீம்ஸ்களை இணையத்தில் தெரிக்கவிட்டனர். அதாவது விஜய் டிவியிலேயே படிச்சு விஜய் டிவிக்கு கலெக்டர் ஆயிட்டாங்க நம்ம ஸ்ரீரித்து 

 என்று பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது. நடிகை ஸ்ரீரித்து நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென்று இவர் இந்த சீரியலை விட்டு வெளியேறியது சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணத்தை ஸ்ரீரித்து தற்போது கூறியுள்ளார். 

அதாவது நடிகை ஸ்ரீரித்து இப்போது சீரியல்களில் இருந்து விலகி திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் ஆகையால் எல்லாமே நன்மைக்கே என்று பதிலளித்துள்ளார். மேலும் பேசிய அவர் போகப்போக இதற்கான காரணம் அனைவருக்கும் தெரியவரும் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீத்துவிற்கு நெருக்கமான தோழிகளில் ஒருவர், சீரியலில் ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் நடிப்பது என்பது சாதாரண ஒன்றுதான் ஆனால் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு ஏற்றார்போல் டயலாக்கை மாற்றி வைப்பது தான் என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்.