மனைவியை அபகரித்த நண்பனை நடுரோட்டில் போட்டு வெட்டிய கணவன்! பதற வைக்கும் சிசிடிவி!

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நடுரோட்டில் இருவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான காரணத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர் .


நெல்லை பழையபேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குட்டி என்கிற சுடலை கடந்த 3ஆம் தேதி இரவு டவுண் ஆர்ச் அருகே மர்ம நபர்கள் இருவரால் சரமாரியாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு அருகில் நின்று உள்ளார் அப்போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேரும் அவரை நடுரோட்டில் இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதை அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். சுடலைக்கு பலமான வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தெருவில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தீவிர விசாரணையின் பேரில் போலீசார் சுடலை வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பெயர் கொண்ட இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவர்களில் ஒருவரது மனைவியுடன் சுடலைக்குத் தவறான தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பலமுறை அதுகுறித்து கண்டித்தும் கேட்காததால் சுடலையை வெட்டிக் கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சுடலையும் - முருகனும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி சுடலை முருகன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது சுடலைக்கு முருகன் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக இருப்பதை முருகன் பார்த்துவிட அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது.