காலையில் நண்பன் பரிசளித்தலாட்டரி சீட்டு! மாலையில் கோடீஸ்வரனான டாக்சி ஓட்டுனர்! வியப்பை ஏற்படுத்தும் நெகிழ்ச்சி சம்பவம்!

நெருங்கிய நண்பர் கொடுத்த லாட்டரி சீட்டினால் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ள சம்பவமானது கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் சொவ்வர என்னும் பகுதி அமைந்துள்ளது. ஷாஜி என்பவர் வாடகை டாக்ஸியின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 33. இவர் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய நெருங்கிய நண்பரான டாக்சி ஓட்டுனர் சந்தோஷ் என்பவருக்கு லாட்டரி சீட்டு ஒன்றை கொடுத்துள்ளார். ஷாஜிக்கு லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கமானதாகும்.

அதன்படி முந்தைய நாள் இரவு தன்னுடைய நண்பரிடம் சாதி நிச்சயமாக பரிசுவிழும் என்று கூறி லாட்டரி சீட்டை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று காலையில் 50 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டை ஷாஜி சந்தோஷுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அன்று மாலையே சந்தோஷுக்கு அந்த லாட்டரி சீட்டில் பரிசு அடித்துள்ளது. இதனை சந்தோஷம் சகோதரர் அவரிடம் கூறியபோது சந்தோஷ் நம்பவில்லை.

அதன் பின்னர்தான் உறுதி செய்த பிறகு சந்தோஷ் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பரிசு பணத்தில் பாதியை சந்தோஷின் மகனின் வருங்கால செலவிற்காக பயன்படுத்துவதற்கும், மீதமுள்ள பணத்தில் ஷாஜி ஒரு ஆட்டோ வாங்குவதும் என்று முடிவெடுத்துள்ளனர். இதுவரை வாங்கிய லாட்டரி சீட்டுகள் பெரிதளவு பரிசு கிடைக்காத சூழலில் இந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்திருப்பது நண்பர்கள் இருவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.