ஜாதிச் சண்டையை மூட்ட போலீஸ் யூனிபார்மில் டிக் டாக் வீடியோ! இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

சாதிகள் இல்லையடி பாப்பா"என்று பாடலை சாதியை அழிக்கும் நோக்கில் பாரதி இயற்றினார். ஆனால், இன்னமும் நம் தமிழ்நாட்டில் சாதி சண்டைகள் ஓயவில்லை.


போலீஸ் உடையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாதி சண்டையை தூண்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு வரும் 19-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் போலீஸ் உடையணிந்து சாதிய மோதலை தூண்டும் வகையில் ஒரு நபர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக விசாரிக்க தொடங்கிய காவல்துறையினர் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தனர்.

அவ்வாறு பேசியது ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவரது பெயர் சரவணன். இவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர். அவர் வீட்டுக்கு சென்ற  காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் அதிகாரி போல் உடையணிந்து, சாதிய வன்முறையை தூண்டும் வகையில் டிக் டாக் செயலியில் வீடியோ எடுத்துள்ளார்.பின்னர் சமூக  வளைத்தலங்களில் அதனை அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  திருநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சரவணனை கைது செய்துள்ள, போலீசார், அவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.