திருமணமான பெண்ணுடன் டிக்டாக் காதல்! உல்லாச வாழ்க்கை! இளைஞனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

திருமணமான பெண்னை டிக்-டாக் செயலி மூலம் காதலித்த ஆட்டோ ஓட்டுநர் தீடீரென்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமானது பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லைக்கு அருகே பாளையங்கோட்டை அமைந்துள்ளது. இங்கு இலந்தை குளத்தை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். இவருடைய மகன் மரிய புஷ்பராஜ் என்பவராவார். இவர் ஒரு டிக்-டாக் பிரபலம். மிகவும் பிரபலமான நடிகர்களின் குரல்களில் மிமிக்ரி செய்வது, பாடல்களை பாடுவது என பல்வேறு வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார்.

இவரைப் போன்றே மதுரையில் உள்ள திருமங்கலம் என்னுமிடத்திலிருந்து சங்கீதா என்ற பெண் டிக்-டாக் பிரபலமாக உள்ளார். இவரும் தன்னுடைய வீடியோக்களை செயலியில் அப்லோட் செய்துள்ளார். இவருக்கு சிறுவயதிலேயே லாரி ஓட்டுநர் ஒருவருடன் திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டினால் இவர் பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

இருவரும் தங்களது வீடியோக்களை லைக் செய்து கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் என இருந்து  வந்தனர். இருவரது வீடியோக்களையும் கலந்து ஒரே வீடியோவாக உருவாக்கி அப்லோட் செய்து உள்ளனர்.

செயலியின் மூலம் தங்கள் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்தே சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமான செய்தி புஷ்பராஜுக்கு தெரியவந்தது. இருந்தாலும் சங்கீதாவை மணம் முடிக்க வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருந்தார்.

தன்னுடைய வீட்டில் இதைப் பற்றி பேசிய போது புஷ்பராஜை அவருடைய பெற்றோர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.இதனால் விரக்தி அடைந்த புஷ்பராஜ் திராவகம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கீதா அந்த மருத்துவமனைக்கு வந்து அவரை நன்கு கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் புஷ்பராஜனின் உறவினர்கள் அவரை வெளியேற்றினர்.

என்ன செய்வதென்று அறியாது திகைத்த சங்கீதா, மதுரைக்கு செல்ல நெல்லை பேருந்து நிலையத்திற்கு சென்றார். துக்கத்தின் உச்சியில் இவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்,அருகில் இருந்தோர் இவரை ஐகிரவுண்ட் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, டிக் டாக் செயலியினால் இளம் பெண் ஒருவர் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த அவலம் அரங்கேறியுள்ளது.இந்த துயர சம்பவமானது நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.