வீட்டு வாசலில் 14 அடி நீள பிரமாண்ட பாம்பு! கதவை திறக்க வந்த பெண்ணை அலற வைத்த சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் வயதான பெண் ஒருவர் வீட்டு வாசலில் 14 அடி நீள பாம்பு ஒன்று இருந்ததை பார்த்த அந்த பெண் அச்சத்தில் நடுங்கி இருக்கிறார்.


ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்ட் பகுதியில் வசித்து வரும் வயதான பெண் ஒருவர் தன் வீட்டு வாசலில் கதவை திறந்த பொழுது அங்கு 14 அடி நீள பாம்பு ஒன்று தரையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை அடுத்து உள்ளூரில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் நபர்களுக்கு தகவல் அளித்திருக்கிறார்.

தோனி ஹரிசன் என்பவர் அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலை கடந்த 27 வருடங்களாக செய்து வருகிறார். தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த வயதான பெண்ணின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த 14 அடி மற்றும் 80 கிலோ எடை கொண்ட பாம்பை பிடித்து உரிய அதிகாரிகளிடம் சேர்த்திருக்கிறார் தோனி ஹரிசன். 

பின்னர் இது குறித்து பேசிய பாம்பு பிடிக்கும் நிபுணர், கடந்த 27 வருடங்களில் நான் பார்த்ததிலேயே மிக பெரிய பாம்பு இதுதான் எனவும் இதனை பார்த்த அந்த பெண் அதி பயங்கரமாக அச்சம் அடைந்திருப்பார் எனவும் கூறினார். 

அதுமட்டுமில்லாமல் இது ஒரு பர்மா வகை பைத்தான் பாம்பு. இதை சட்டத்துக்குப் புறம்பாக இங்குள்ள மக்கள் யாரோதான் வைத்திருக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இந்தப் பாம்பு அவர்கள் பிடியில்தான் இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த பாம்பு ஆக்ரோஷமான குணத்தை கொண்டு இல்லாததால் அதனை எளிதில் பிடிப்பதற்கு வசதியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும் இது கொடிய வகை விஷம் கொண்ட பாம்பு எனவும் இந்த பாம்பின் மூலம் பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.