யோகா கற்க வந்த பெண்களிடம் சில்மிஷம்! இந்திய சாமியாருக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த தரமான சம்பவம்!

பெண்களிடம் ஆண்கள் தகாத முறையில் நடந்துக்கொள்வது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது.


 எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இது போன்ற இழிவான செயல்களை சில காமவெறி பிடித்தவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். சில ஆண்மீக கயவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆண்மீகத்திற்கே பேரிழுக்காக உள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பலே அனுமான் கோயிலின் இளைய மடாதிபதியாக ஆனந்த் கிரி என்பவர் உள்ளார்.

இவர் அப்பகுதியில் தலைச்சிறந்த யோகா ஆசிரியர் ஆவார். இவர் யோகா கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆஸ்திரேலியா சென்றார்.அங்கு அவர் நிறைய யோகா வகுப்புகளை எடுத்தார். இவரிடம் யோகா கற்றுக்கொள்ள இரு பெண்கள் அவரை அவர்களின் இல்லத்திற்கு அழைத்தனர்.

அங்கு சென்ற ஆனந்த் கிரி அவர்களிடம் தகாத முறையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆனந்த் கிரியின் மீது போலீசில் புகார் அளித்தனர். ஆஸ்திரேலியா போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனை ஆனந்தின் குருவான நரேந்திர சிங்கிடம் கேள்வி கேட்டப்போது, இதனை உறுதிபடுத்தியுள்ளார்.