பதுங்கி பாய்ந்த ஆஸ்திரேலியா! வீழ்ந்த இந்தியா!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்313 ரன்களை குவித்தது.


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 193 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கவாஜா 93 ரன்களுக்கும், பின்ச் 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 31 ரன்களை எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 313 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்படி ராயுடு 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் சார்பில் கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் சிறப்பாக விளையாடி 123 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் ஷங்கர் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 48.2  ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.