கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்டர் பாயாக மாறிய பிரதமர்! மைதானத்தில் திடீர் பரபரப்பு! வரலாற்றில் முதல்முறை!

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் மைதானத்திற்கு தண்ணீர் எடுத்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது .


இலங்கை அணி ஆஸ்திரேலியா நாட்டில் கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி பில்டிங் செய்துகொண்டிருந்தபோது 16-ஆவது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்கு கொண்டு வந்தார். 3

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் தண்ணீர் கொண்டு வந்ததை கண்டு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர். ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் போது, அந்த நாட்டு பிரதமர் மைதானத்திற்கு தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து அந்நாட்டு வீரர்களுக்காக வாட்டர் பாய் வேலை செய்த சம்பவம் உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.