அடுத்த 40 ஆண்டுகள் அத்திவரதர் இருக்கப் போவது இங்கு தான்! வைரல் புகைப்படம்!

பக்தர்கள் பலரும் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


பல்வேறு வெளியூர்களில் இருந்தும் அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருக்குளத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள மூலவரான அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக வெளியில் எடுக்கப்பட்டு உள்ளார்.

இதற்கு முன்பு அத்திவரதர் கடந்த  1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த திருக்குளத்தை விட்டு வெளியில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த அத்தி வரதர் சுமார் 48 நாட்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக வெளியில் வைக்கப்படுவார் . இந்த 48 நாட்கள் முடிந்த பின்பு மீண்டும் வெள்ளி பேழைக்குள்  வைக்கப்பட்டு திருக்குளத்திற்குள் அடியில் வைக்கப்படுவார்.

அத்தி  வரதரின் தரிசனத்திற்காக சிறப்பு பேருந்துகள் காஞ்சிபுரத்திற்கு  இயக்கப்படுகின்றன. இந்த அத்தி வரதர் தரிசனம் செய்யும் நேரம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தி வரத பெருமாள் ஜூலை 1 முதல் ஜூலை 31 , 2019 வரை படுத்த கோலத்திலும் ஆகஸ்ட், 1 முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார். 

வரும்  ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியுடன் அத்தி வரதர் தரிசனம் முடிவு பெற உள்ளது என்று நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகவே 16ஆம் தேதி நள்ளிரவுடன் அத்தி வரதர் தரிசனம் முடிவு பெறும். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் ஆகம விதிகளின்படி மீண்டும் வெள்ளி பேழையுள்   வைக்கப்பட்டு குளத்திற்குள் வைக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என  கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது அடுத்த 40 ஆண்டுகள் அத்திவரதர் இருக்க போகும் இடத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன . இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.