ஸ்டாலின் சதி முறியடிக்கப்பட்டது. அ.தி.மு.க.வை உடைக்கும் முயற்சி பலிக்காது..! தி.மு.க.வின் திட்டத்தை உடைத்த எடப்பாடி பழனிசாமி.

கடுமையான அரசுப் பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேசிய முதல்வர், ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.


அவர் பேசுகையில், ‘திமுக பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் ஒருமுறை கூட மக்களுக்கு பொங்கல் பரிசு உள்பட எந்த உதவியையும் செய்யவில்லை. மேலும், தமிழகத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை என பொய் குற்றச்சாட்டுக்களை ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஸ்டாலின் வருவார், பேசுவார், கவர்ச்சிகரமாக தேர்தல் அறிக்கை விடுவார்.ஆனால் எதுவும் செய்யமாட்டார்’ என கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதன்பிறகு திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பேசிய முதல்வர், “நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்கள் உருவாக்கியதுதான் அதிமுக. அதை ஸ்டாலின் உடைக்கப் பார்க்கிறார். அவர் பேசும்போது அதிமுக உடையும் என்கிறார். ஆனால், எந்தக்காலத்திலும் அதிமுக உடையாது. ஒரு தொண்டனைக் கூட அவரால் தொட முடியாது. 

அதிமுகவை உடைக்க நடந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் தீட்டிய சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டது. அதனால் அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க அவர் முயற்சி செய்கிறார். முதலில் திமுகவை அவர் காப்பாற்றிக் கொள்ளட்டும். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது” என்றும் கூறினார்.