பெட்ரோல் பங்கில் மனைவிகளை மாற்றிக் கொண்ட கணவன்கள்..! திருப்பூர் பரபரப்பு! பகீர் காரணம்!

மனைவிகள் தங்களுடைய கணவர்கள் என்று நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற வினோத சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சின்னபுதூர் பகுதி எனும் இடத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய வயது 50. இவருடைய மனைவியின் பெயர் பழனியம்மாள். பழனியம்மாளின் வயது 42.

வேலை நிமித்தமாக இருவரும் வெளியே வெளியே சென்ற போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். மனைவி பழனியம்மாள் வெளியே நிறுத்தி விட்டு தான் மட்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது அதே பெட்ரோல் பங்கில் முத்துசாமி என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்கு வந்துள்ளார். இவரும் தன் மனைவியான பொன்னாத்தாலை வெளியே இறக்கிவிட்ட பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் ஒரே ரக இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டிருந்தனர்.

மேலும் ஒரே வண்ண சட்டையையும் அணிந்திருந்தனர். ஒருபடி மேலாக இருவரும் ஒரே ரக தலை கவசத்தையும் அணிந்திருந்தனர். இருவரின் மனைவிகளும் கணவர் வெளியே வருவதற்காக வாயிலில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய கணவர் என்று அறியாமல் முதலில் வந்த ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தில் பொன்னாத்தாள் ஏறிக்கொண்டார்.

மேலும் தன் மனைவி தான் இருசக்கர வாகனத்தில் ஏறுகிறார் என்று எண்ணிக்கொண்டு ரங்கசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த சம்பவமானது பெட்ரோல் பங்க் சுற்றுவட்டாரத்தில் வேடிக்கையை ஏற்படுத்தியது.