விஜய் முன்னிலையில் மேடையில் கலர் கலராக அட்லி விட்ட ரீல்! கைகொட்டி சிரிக்கும் தமிழ் சினிமா!

தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்.


பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் அட்லி தளபதி விஜய் குறித்து மிகவும் புகழ்ந்து பேசினார். "நான் எப்போதுமே என்னுடைய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு கிரே நிறத்தில் உள்ள டி-ஷர்ட்டை தான் அணிந்து வருவேன் . ஆனால் தற்போது தான் தெரிகிறது என்னுடைய அதிர்ஷ்டம் டிஷர்ட் கொடுத்ததில்லை , தளபதி விஜய்யை பொருத்தது என்று கூறினார் இயக்குனர் அட்லி. 

விஜய் அண்ணா என்னை எப்போதுமே மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து பணியாற்றுமாறு கூறுவார். ஆனால் எனக்கு விஜய் அண்ணாவுடன் பணியாற்றுவதற்கு மிகவும் பிடித்திருக்கிறது . அவரை பலவித கோணங்களில் காட்ட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது . ஆகையால் நான் அவர் உடனே தொடர்ந்து இத்தனை படங்களில் வேலை பார்த்து வருகிறேன் என்று கூறினார்.

நான் அவருடன் பணியாற்றுவதை எவராலும் தடுக்க இயலாது எனவும் இயக்குனர் அட்லீ கூறியிருந்தார். பொதுவாக இயக்குனர்கள் யாரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை அவ்வளவு எளிதில் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் நான் இங்கு வெளிப்படையாக கூறுகிறேன் என்னுடைய பிடித்தமான நடிகர் எப்போதுமே தளபதி விஜய் தான் என்றும் தைரியமாக கூறினார் இயக்குனர் அட்லி. 

மெர்சல் வெற்றிக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் விஜய் அண்ணாவுக்காக காத்திருந்தேன். அவருடன் தான் படம் பண்ண வேண்டும் என்று வெயிட் செய்தேன். தற்போது அது நடந்துள்ளது.

 பல பேர் என்னுடைய தோலின் நிறத்தை வைத்து கிண்டலடித்து வருகின்றனர். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்னுடைய நோக்கம் என் லட்சியத்தை நான் அடைவது. சொல்லப்போனால் என்னுடைய எதிராளிகளை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர்கள் தான் எனக்கு தினம்தோறும் மீம்ஸ் மற்றும் புதுவிதமான ஒரு செயல்களிலும் ஈடுபட்டு என்னை பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று நக்கலாக கூறினார்

இதனையடுத்து பிகில் திரைப்படத்தை பற்றி பேசிய இயக்குநர் அட்லி இந்தத் திரைப்படத்தை பார்க்கும் பொழுது பார்சிலோனாவில் சென்று நீங்கள் புட்பால் மேட்ச் பார்த்தது போன்ற ஒரு திருப்தியை உங்களுக்கு அளிக்கும் என்று கூறினார். மேலும் இந்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் உடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் திரைப்படங்களில் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக தான் நான் கதை எழுதி இருப்பேன் ஏனெனில் இந்த உலகமே பெண்கள் இல்லை என்றால் நாம் யாருமே இருக்க இயலாது என்றும் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். 

மேலும் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த இயக்குனர் அட்லி தற்போது சென்சார் சான்றிதழ் வாங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .அந்த பணியை வெற்றிகரமாக முடித்த பின்பு நாங்கள் இந்த ட்ரைலரை வெளியிடுவோம். இந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்த பின் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றும் இயக்குனர் அட்லி கூறியிருந்தார்.

இதனிடையே கூட்டத்தை பார்த்து அட்லி உணர்ச்சிவசப்பட்டு கலர் கலராக ரீல் விட்டுள்ளார் என்கிறார்கள் சினிமா உலகம். ஏனென்றால் மெர்சல் படம் கமர்சியலாக சக்சஸ் என்றாலும் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அட்லி சகட்டு மேனிக்கு எடுத்து தள்ளியதால் திட்டமிட்டதை சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட் எகிறியது.

படத்தை விளம்பரம் செய்யும் மும்முரத்தில் இதனை படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் கவனிக்கவில்லை. பிறகு கணக்கு பார்த்த போது தான் மெர்சல் படத்தால் தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து இந்த விஷயம் தீயாக பரவியது. எனவே அட்லியை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

ஹீரோக்களும் கூட கதை திருட்டு புகாரால் அட்லியை கண்டுகொள்ளவில்லை. இதனால் பல முன்னணி ஹீரோக்களை சந்திக்க அட்லி முயன்றதும் எதுவும் பலன் அளிக்காத நிலையில் தெலுங்கு திரையுலகம் சென்று அங்கு படம் செய்ய கூட அட்லி முயன்றதையும் சினிமா உலக சீனியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் பிகில் கதையை எப்படியோ பிடித்து அதனை விஜயிடம் கூறி அட்லி ஓகே செய்துள்ளதாகவும் ஆனால் இதனை எல்லாம் மறைத்து விஜய்க்காக இத்தனை வருசம் காத்திருந்ததாக அட்லிய சுற்றியது கலர் கலர் ரீல் என்று கூறி சிரிக்கின்றனர் திரையுலகினர்.