நான் கருப்பு! என் மனைவி அழகு! இதை பலரால் தாங்க முடியவில்லை! அட்லி அட்டகாசம்!

இயக்குனர் அட்லி வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.


இவர் முதன் முதலில் இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக சினிமா துறையில் கால் பதித்தார் அதற்கு பின்பு ஆர்யா , ஜெய், நயன்தாரா ,நஸ்ரியா ஆகியோர்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதற்கு பின்பு தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் போன்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படங்கள் அனைத்துமே அட்லிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. தற்போது மீண்டும் தளபதி விஜய்யை வைத்து மூன்றாவதாக பிகில் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படமானது வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டு விழாவில் திரைப்பட குழுவினர்கள் அனைவரும் பங்கேற்றனர் . விழாவில் பேசிய அட்லி தன்னுடைய நிறத்தை வைத்து பலபேர் தரக்குறைவாக பேசியதாக குறிப்பிட்டிருந்தார் .

மேலும் எனக்கு இப்படிப்பட்ட அழகான மனைவியா? என்று பலரும் கிண்டல் அடிப்பதையும் அவர் கூறியிருந்தார். மேலும் எதனை சாதிக்க வேண்டுமானாலும் அதற்கு நிறம் ஒரு தடையாக இருக்காது என்று இயக்குனர் அட்லி கூறியிருந்தார்