திமுக கூட்டணிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணிக்கு தலித் கட்சி திடீர் ஆதரவு! மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பகடை அவருக்கு ஈரோட்டில் மணிமண்டபம் கட்டபடும் மற்றும் சிலை அமைக்கப்படும் என்று சேலத்தில் நடைபெற்ற ஆதி தமிழர் பேரவை மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்
இதனை தொடர்ந்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொல்லான் பகடையின் வாரிசுகள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதியமான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு இடம் எதுவும் கேட்கவில்லை என்றும் அதியமான் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சிறுசிறு கட்சிகள் வழக்கமாக ஆளும் கட்சிக்க தான் ஆதரவு கொடுக்கும். ஆனால் சிறு கட்சிகள் தங்களை தேடி வருவதால் ஸ்டாலின் மகிழ்ச்சியில் உள்ளார்.