தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியின் அசுரன் ரிலீஸ் தேதி! கெத்தா அறிவித்த படக்குழு!

நடிகர் தனுஷின் அசுரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.


தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் அசுரன். நடிகர் தனுஷ் என்ற திரைப்படத்தின் கதாநாயகன் அவருடன் நடிகை மஞ்சுவாரியர் ,நடிகர் பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர் .

மஞ்சுவாரியர் இந்த திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு  தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு  ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார். இரண்டாவது முறையாக இயக்குனர் வெற்றிமாறனும் இசை அமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் இருவரும்   இணைந்து பணியாற்றி  உள்ளனர்

இந்த திரைப்படமானது "வெக்கை" என்னும் நாவலை அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த திரைப்படமானது வரும் அக்டோபர் மாதம் 4-ஆம்  தேதி திரையிடப்படும் என்று திரைப்படக்குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .