சந்திராஷ்டமத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள்! ஆட்டிப் படைக்கப்போகும் புரட்டாசி மாதம்!

எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த விதமான பலன்களை இந்த புரட்டாசி மாதத்தில் பெற போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.


மேஷம் :

எல்லாவற்றிலும் முதன்மையாக திகழ வேண்டும் என நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே.. உங்களுக்கு இந்த மாதம் மிகவும் யோகமான மாதமாக அமையும். இந்த மாதம் உங்களுடைய தனித்திறமை வெளிப்படப் போகிறது . அதுமட்டுமில்லாமல் குலதெய்வத்தின் மொத்த அனுக்கிரகமும் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அமைந்து உங்கள் வாழ்வில் முழுவதும் உங்களுக்கு வாழ்வின் முன்னேற உதவி புரியும் . மேலும் பூர்வீக சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய வீடு, நிலம்  வாங்குவீர்கள். பண பிரச்சனைகள் பிரச்சனைகள் காரணமாக நீங்கள் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும் .ஆகையால் பணம் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் வரும் சாதக பாதகங்களை நினைவில் கொண்டு செயல்படுவது நன்மையை தரும்.வரும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ம், தேதி சந்திராஷ்டம தினமாக உள்ளது ஆகையால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது எந்த ஒரு பிரச்சனையிலும் யாரிடமும் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ரிஷபம் :

எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருந்து நினைத்த காரியத்தை நிறைவேற்றும்   ரிஷப ராசி அன்பர்களே,  உங்களுடைய ராசி  அதிபதியான சூரியன் உங்களுக்கு யோகமான அமைப்பை இந்த மாதம் அருள இருக்கிறார். இதன் மூலம் உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு. நீங்கள் எப்போதும் குலதெய்வத்தை மனதில் கொண்டு எந்த ஒரு செயலையும் தொடங்க வேண்டும்.  அப்படி செய்யும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். தொழிலில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து விலகும் இருப்பினும் . கூட்டு முயற்சியில் தொழில் செய்பவர்கள் முடிந்தவரை எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது மேலும் திருமணத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு சற்று தாமதமாக நினைத்த காரியங்கள் நிறைவேறும்.வரும் அக்டோபர் மாதம் 4, 5 ,6 ஆகிய தினங்கள் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமையும். ஆகையால் பயணம் செய்கையில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

மிதுனம் :

வித்தியாசமான எண்ணங்களை புகுத்தி அதன் மூலம் வெற்றியை காண விரும்பும்  மிதுன ராசி அன்பர்களே,  உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்த வெற்றியை அளிக்க காத்திருக்கிறது. மேலும் புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு கைகூடும். உங்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான ஆதரவும் உதவியும் தக்க நேரத்தில் வந்து சேரும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான பண வரவு வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்திலும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வரும் அக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டம் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கடகம் :

உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கடகராசி அன்பர்களே , உங்களுக்கு இந்த மாதம் மிகவும் அனுகூலமான மாதமாக அமையும் . மேலும் உங்களுடைய பொருளாதார நிலை உயரப் போகிறது.  உங்கள் ஆளுமை திறமையை பயன்படுத்தி நீங்கள் அனைவரையும் கவர்வீர்கள் . உங்களுக்கு வெளியூர் பயணங்கள் கைகூடும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். நினைத்த காரியங்கள் வெற்றியை அளிக்கும்.வரும் அக்டோபர் 9 , 10, 11 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் புதிய நபர்களிடம் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

சிம்மம் :

எதிலும் வீரமாக செயல்படும் சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் உங்களுக்கு தேவையான அனைத்து அனுபவத்தையும்  இந்த மாதத்தில் தரப்போகிறார்.  மேலும் இந்த மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு சற்று பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் . ஆனால் இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். கணவன்-மனைவி இடையே சற்று பிரச்சினைகள் வந்துபோகும். ஆனால் இந்தப் பிரச்சனைகள் நிரந்தரமாக இருக்காது .அதேபோல் புதிய வாகனம் வீடு வாங்கும் யோகம் இந்த மாதத்தில் உண்டு. தொழிலில் சற்று கவனம் தேவை ஏனெனில் யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து போகக் கூடாது தொழில் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்கள் செல்லாமல் இருப்பது நல்லது.

கன்னி :

உலக அறிவு அதிகம் கொண்ட கன்னி ராசி நேயர்களே , ராசி அதிபதியான புதன் பகவான் உங்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியத்தை வெற்றியான நிறைவேற்றித் தருவார். உடல் நலத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது .ஏனெனில் இந்த மாதம் உங்களுக்கு மருத்துவச் செலவுகள் வந்து வருவதற்கு வாய்ப்புகள் உண்டு .அதனால் கவலைகளை தவிர்த்து நிம்மதியாக இருக்க தெய்வ வழிபாடு மேற்கொள்வது அவசியம். இந்த மாதம் முழுவதும் வெளியூர் பயணங்கள் அல்லது நீண்ட தூர பயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. வரும் செப்டம்பர் மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

துலாம் :

எதிலும் நடுநிலையாக சிந்தித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே உங்களுடைய ராசியில் 12ல் சுக்கிரன் இருந்து உங்களுக்கு செல்வ வாய்ப்புகளை தேடி தர காத்திருக்கிறார். ஆகையால் வீண் செலவுகள் இந்த மாதம் உங்களுக்கு குறைந்துவிடும். பூர்வீகச் சொத்து விவகாரம் பற்றிய பிரச்சனைகள் நீங்கிவிடும்.  குலதெய்வ நன்மை வழிபாடு அனைத்து நன்மைகளையும் அளிக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் மனைவி உதவியாக நின்று அந்த பிரச்சனையிலிருந்து உங்களை காப்பாற்றுவார். செப்டம்பர் மாதம் 19 , 20 ,21 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம் :

எதிலும் மிகுதியாக உணர்ச்சிவசப்படும் விருச்சிக ராசி அன்பர்களே , உங்களுடைய லட்சியம் இந்த மாதம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உண்டு . தொழிலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது . குடும்ப விவகாரங்களில் விவாதங்களில் ஈடுபட கூடாமல் ஈடுபடாமல் இருந்தால் பிரச்சினைகளில் இருந்து விலகிக் கொள்ளலாம். வாகனத்தில் பயணம் செல்லும் போது செய்யும் போது சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது தந்தைவழி உறவினர்களால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளதால் சற்று கவனமாக செயல்பட வேண்டும். நண்பர்களால் ஆதாயம் உண்டு இந்த மாதம் செப்டம்பர் மாதம் 23 , 24 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது

தனுசு :

எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது வெற்றிக்கான நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே , இந்த மாதம் முழுவதும் அதிக கவனம் கவனத்துடன் செயல்படுவது நல்லது . தெய்வ நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உருவாகும் தைரியமும் உற்சாகமும் உங்களுக்கு அதிகரிக்கும்..எடுத்த காரியத்தில் பொறுமையுடனும் நிதானமுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றி காணலாம். செப்டம்பர் மாதம் 24 ,25 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மகரம் :

எல்லாரிடமும் சமமாக பழகும் மகர ராசி அன்பர்களே , இந்த மாதம் முழுவதும் நீங்கள் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.  தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உற்று கவனித்து எந்த விஷயத்திலும் செயல்படவேண்டும் என்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பாக சற்று கவனமாக செயல்படுவது நல்லது . புனிதத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு . குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.  நினைத்த காரியங்கள் வெற்றியடையும் . மனதில் தேவையான தைரியமும் உற்சாகமும் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த பணி உயர்வு ஊதிய உயர்வு உண்டாகும். செப்டம்பர் மாதம் 26, 27 தேதிகளில் உங்களுக்கு சந்திராஸ்டம் இருப்பதால் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

கும்பம் :

நினைத்த காரியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கும்பராசி அன்பர்களே , உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் இந்த மாதம் நிறைவேற வாய்ப்புகள் உண்டு .உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நண்பர்களால் ஆதாயமுண்டு குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் . உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும் பிரிந்துபோன குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு . தாயாரின் உடல்நிலை சற்று பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு ஆகையால் அவரது உடல்நலத்தில் கவனத்துடன் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது . மேலதிகாரிகளின் பிரச்சினைகளிலும் விவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது . புதியதாக அறிமுகமாகும் நபர்களிடம் இருந்து சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். செப்டம்பர் மாதம் 28 ,29 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

மீனம் :

எப்போதும் மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடைய மீனராசி அன்பர்களே,  இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும் . புனித ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார நெருக்கடி காரணமாக மற்றவர்களிடத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும் புதிய நிலங்கள் வாங்குவதை தவிர்க்கவும் .  மாதம் முழுவதும் புதிதாக எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் சக ஊழியர்களிடமும் மேல் அதிகாரிகளிடம் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. செப்டம்பர் மாதம் 30 மற்றும் அக்டோபர் மாதம் 1 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.