அதிகாலையில் கோர விபத்து..! பறிபோன 2 உயிர்! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காத்திருந்து பேரதிர்ச்சி!

புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் இறந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் வெங்கடேசன். கடந்த 8 ஆண்டுகளாக வெங்கடேசன் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார்.

நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய, ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை போட்டுவிட்டு சென்னை புறப்பட்டார். 

திருச்சி விமான நிலையத்திற்கு விஜயபாஸ்கரை வெங்கடேசன் காரில் வந்து இறங்கிவிட்டார்.  வெங்கடேசன் தன்னுடைய சொந்த ஊரான பரம்பூருக்கு அதே காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை இடையப்பட்டி சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் கிளிக்குடி வீரப்பெருமாள்பட்டி பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்று புளிய மரத்தின் மீது வாகனம் வேகமாக மோதியுள்ளது. 

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே செல்வம் மற்றும் வெங்கடேசன் உயிரிழந்தனர். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் தாயார் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.