நடு வீட்டில் சடலமாக தொங்கிய பிரபல டிவி நடிகை! நேரில் பார்த்து அதிர்ந்த ஆண் நண்பர்!

ஹிந்தி சின்னதிரையுலகின் இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹிந்தி சின்னத்திரை உலகில் புதிதாக வலம் வரும் கதாநாயகிகளில் ஒருவர் ஷீஜல் ஷர்மா. இவர் நடித்த பல சீரியல்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. தற்போது பல்வேறு சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்திருந்தார். இவர் மும்பை மாநகரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியுலகத்திற்கு ஷீஜல் ஷர்மாவின் நெருங்கிய நண்பரான அரு வர்மா உறுதி செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேட்டியில், "ஷீஜல் ஷர்மா தற்கொலை செய்து கொண்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் என்னுடைய சகோதரியை போன்றவர். அவருடைய இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

10 நாட்களுக்கு முன்னர் நாங்கள் நேரில் சந்தித்து பேசினோம். அப்போதுகூட அவர் நலமாக இருப்பதாகவே கூறினார். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் எனக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் கூட வாட்ஸ்அப்பில் நன்றாகத்தான் உரையாடினோம்" என்றார்.

இதனுடைய காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷீஜல் ஷர்மாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஹிந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.