உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை இந்திய ஜோதிடரொருவர் சரியாக கணித்திருக்கும் சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலக கோப்பையை துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்! இந்தியா தோற்கும் என்றார் தோற்றது! அப்போ, வெல்லப்போவது யார்?
வருட தொடக்கத்தில் பாலாஜி என்ற வளரும் ஜோதிடர் ஒருவர் வருட பலன்களை பற்றி புதுயுகம் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். "விஹாரி வருடப்பலன்கள்" என்ற நிகழ்ச்சியில் இவர் பல்வேறு வருங்கால நிகழ்வுகளை கணித்திருந்தார். அந்த கணிப்புகள் ஒவ்வொன்றாக சரியாக நடந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சியின் வீடியோவானது பரபரப்பாக பரவி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் பாலாஜி, "நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அரசமைப்பார்" என்று கூறியிருந்தார். அவர் கூறியவாறே பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்து நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராகி உள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் தன் கணிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெறுமென்றும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் மோதுமென்றும் கூறியிருந்தார்.
நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் என்றும், இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்று உலக கோப்பையை வெல்லும் என்றும் கூறியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்நாயகன் விருதை தட்டி செல்வார் என்றும் கூறியிருந்தார்.
இவர் கூறியவற்றில் 90% நிகழ்ந்திருக்க, நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே மீதமுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.