காதலியுடன் பைக்கில் சென்ற தமிழக நீச்சல் வீரருக்கு நேர்ந்த கொடூரம்!

உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் நம் இந்தியர்கள் நன்றாக சோபித்து வருகின்றனர். அவர்களுள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றி வாகை சூடுவது  நம் அனைவரையும் பெருமைப்பட செய்கிறது.


இதேபோன்று ஆசிய விளையாட்டு போட்டியில் 2010-ஆம் ஆண்டு, நீச்சல் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும் ,சென்னைக்கும் பெருமை சேர்த்த நட்சத்திர வீரர் நேற்றிரவு விபத்தில் இறந்து போனது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள  திருவான்மியூர் பகுதியில் ஷெனாய் நகர் என்ற பகுதி அமைந்துள்ளது . பாலகிருஷ்ணன் என்பவர் அங்கு வசித்து வந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தது. அந்த போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 

அப்போதிருந்த தமிழக முதல்வர்  மாண்புமிகு மறைந்த டாக்டர் கலைஞரிடம் ஆசியும், பாராட்டும் பெற்றார்.  பின்னர் அமெரிக்கா நாட்டில் வேலைக்காக இடம் பெயர்ந்தார். 

சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய விடுமுறைக்காக சென்னையில் உள்ள தன் வீட்டிற்கு வந்தார். இங்குள்ள தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன் உறவினர் ஒருவரை காண சென்றார். பார்த்து விட்டு திரும்பி வரும் வழியில் தன் காதலியுடன் அரும்பாக்கம்வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜல்லிக்கலவை மீது தன் பைக்கை ஏற்றினார். அவ்வாறு செய்ததில் வாகனம் நிலைகுலைந்து தடுமாறியது. துருத்ரிஷ்டவசமாக அப்போது அந்த பக்கம் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. வாகனம் கட்டுபாடிழந்து  லாரியின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டது. பாலகிருஷ்ணனும் சக்கரங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.