இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்காக ஓட்டப் பந்தயத்தில் வென்று முதல் தங்கத்தை வாங்கிக் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த தங்கத் தாரகை கோமதி மாரிமுத்து அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
எனக்காக மாட்டுத் தீவனத்தை சாப்பிட்டார் என் அப்பா! செய்தியாளர் சந்திப்பில் கதறிய கோமதி மாரிமுத்து!

அவர் பேசப் பேச அப்போது அவரை மீறி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு அவரது ஊரில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
அவரது தாயார், என் கணவர் இறந்த பிறகு எல்லாமே என் மகள்தான் அவள் இப்போது இந்தியாவிற்காக தங்கம் வென்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என் தெரிவித்தார். இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிற்கு தடகள போட்டியில் தங்கம் வென்றதற்காக தனியார் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய அவர் கண்ணீர்விட்டு பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் என்னவென்றால் அவரது வீட்டின் வறுமை காரணமாக'நான் சாப்பிட வேண்டும்'என்பதற்காக என் தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்டிருக்கிறார். என் என் அப்பா உயிரோடு இருந்திருந்தால் நான் ஓட்டப் பந்தயத்தில் வென்று இந்தியாவிற்கு புகழ் சேர்த்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்திருப்பார்.
என்று தங்க மகள் கோமதி மாரிமுத்து அந்த நிகழ்ச்சியில் கண்ணீருடன் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இவருடைய திறமைக்கு தமிழகமே தலைவணங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது. இவரால் இந்தியா பெருமை கொள்கிறது. திருச்சியில் வறுமையான சூழ்நிலையில் சாதாரண குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கோமதி மாரிமுத்து அவருடைய திறமையால் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதில் பெருமை கொள்வோம்.