பவுலர்களும் இனி மாஸ்க் ஹெல்மெட் அணிய வேண்டும் போலயே!

பயிற்சி ஆட்டத்தின் போது மேற்குவங்காள வீரர் அசோக் டிண்டா முகத்தில் காயம் அடைந்தார்.


பயிற்சி ஆட்டத்தின் போது மேற்குவங்காள வீரர் அசோக் டிண்டா முகத்தில் காயம் அடைந்தார். வேக பந்து வீச்சாளரான அசோக் டிண்டா வீசிய பந்தை பேட்ஸ்மேன் நேராக அடித்தார். அந்த பந்தை கேட்ச் செய்ய முயலும் போது அசோக் டிண்டா முகத்தில் பந்து பட்டு கடுமையான காயம் ஏற்பட்டது.

ஜெதேவ் உனட்கட் மற்றும் அஸ்வின் ஆகியோர் அசோக் டிண்டாவின் காயத்திற்கு பிறகு பவுலர்களின் பாதுகாப்பு குறித்து விவாதத்தில் இறங்கியுள்ளனர். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜெதேவ் உனட்கட் பந்து வீச்சாளர்களுக்கு முகத்தை பாதுகாக்கும் வகையில் மாஸ்க் கொண்டுவர வேண்டும் என்று ட்விட்டரில் ட்விட் செய்திருந்தார் .

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் போட்டிகள் ஆரம்பித்த பிறகுதான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றது. மேலும் பவுலர்கள் பாதுகாப்பிற்கு ஏதாவது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்தானது நடுவர்கள் மீதும் பட வாய்ப்புள்ளதால் , சமீப காலங்களில் நடுவர்களும் ஹெல்மெட் அணிந்துகொண்டு மைதானத்திற்கு வருகிறார்கள். போகிற போக்கை பார்த்தால் இனிமேல் பவுலர்கள் ஹெல்மெட்டுடன் தான் பந்து வீசவேண்டும் போல.