ஆண் வாரிசு இல்லை என்ற கவலையா? எளிய வாஸ்து மாற்றம் செஞ்சா உங்க ஆசை நிச்சயம் நிறைவேறும்!

குடும்பத்திற்கு ஆண்வாரிசு வேண்டும் என்ற சாமானியனின் ஏக்கத்தை மட்டும் இன்னும் தகர்த்த முடியவில்லை.


ஆக, ஒரு வீட்டில் ஆண் வாரிசு இல்லாததற்கும், வாஸ்துவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய உண்மை.

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடமில்லாத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும், சலிக்காத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், நிறைவான கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,

ஒரு துன்பமில்லாத வாழ்வும் இவை எல்லாம் அருளும் அன்னை அபிராமியின் கடைக்கண் அருளும் சர்வ நிச்சயமாக வாஸ்து பலம் முழுமையாக வாய்க்கப்பெற்ற வீட்டில் மட்டுமே நிரம்பப்பெறும் என்பது போலவே ஒரு குடும்பத்தின் வாரிசுகளை நிர்ணயம் செய்வதும் அறிவியல் ரீதியான இந்த வாஸ்து அமைப்பு தான்.

அண்டமும், பிண்டமும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பது போல நாம் வசிக்கும் இல்லமும் பஞ்சபூதங்களால் ஆட்சி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையை நீரும், தென்கிழக்கு மூலையை நெருப்பும், தென்மேற்கு மூலையை நிலமும், வடமேற்கு மூலையை காற்றும், பிரம்ம ஸ்தானத்தை ஆகாயமும் ஆட்சி செய்கின்றன.

நம்மைச் சுமக்கின்ற நிலமாகிய பூமித்தாய் தென்மேற்கு மூலையை ஆள்வதன் அடிப்படையிலேயே ஒரு பெண் சுமக்கின்ற வாரிசு ஆணா, பெண்ணா என்பதும் அந்தப் பெண்ணின் வீட்டின் தென்மேற்கு மூலையை பொறுத்தே அமையும். எனவே, ஆண் வாரிசு வேண்டும் என்று ஆலயம் சுற்றுவோர் அனைவரும் தமது வீட்டைச் சுற்றி ஒரு மேற்பார்வையிட்டு தென்மேற்கு மூலையை நன்றாக ஆராய்ந்து கவனியுங்கள்.

அதில் தேவையானவற்றை வைத்தும், தேவையில்லாதவைகளை நீக்கியும் உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை வாஸ்து பலம் மிக்கதாக செய்தால் உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் இயற்கையின் அருளால்!