ஆண் நண்பரிடம் பேசியதை பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்! அதிர்ச்சியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!

அருப்புக்கோட்டை பாளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி கலாராணி. இவரை நேற்று மாலை முதல் காணவில்லை. இதனை அடுத்து போலீசாரிடம் புகார் அளித்து பெற்றோர் தேடி வந்தனர்.


இந்நிலையில் இன்று கலாராணி வீட்டுக்கு அருகிலுள்ள மூடப்படாத கிணற்றில் அவரது சடலம் மிதந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், கலாராணி நேற்று முன் தினம் அந்த பகுதியில் ஆண் நண்பர் ஒருவருடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் கலாராணி பெற்றோரிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் கலாராணியை கண்டித்துள்ளனர். இதன் காரணமாகவே கலாராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பதை அறிய  நகர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .