ஜீவா - அருள்நிதி கலக்கும் புதிய படம்! பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட தனுஷ்!

ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.


ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ்  அவருடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம்  வெளியிட்டுள்ளார். 

ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் கூட்டணியில் "களத்தில் சந்திப்போம் " என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தின் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் வெளியாகப்போகிறது. இந்த திரைப்படத்தினை R.B.சவுத்ரியின்  மகனும் ஜீவாவின் அண்ணனுமான  ஜித்தன் ரமேஷ் தயாரிக்கப் போகிறார். 

இத்திரைப்படத்தை மாப்பிள சிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் நட்பை மையமாக வைத்து நகரும் என திரைப்படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளனர். இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ரோபோ ஷங்கர் , நரேன், பால சரவணன்  மற்றும் இன்னும் சில முன்னணி நடிகர்கள்  நடிக்க உள்ளனர். 

இத்திரைப்படத்திற்கான இசையை  இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா அமைக்கப் போகிறார். ஒளிப்பதிவாளராக அபிநந்தன் இத்திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படப்பிடிப்பு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என திரைப்படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக இன்று நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார். https://twitter.com/dhanushkraja/status/1157886833096712192