அரசு அனுமதியின்றி செயற்கை தாய்ப்பால் ஆய்வு! சிக்கலில் நெஸ்லே நிறுவனம்!

சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனமான இந்தியப் பிரிவு ,'நெஸ்லே இந்தியா.' இது குழந்தைகளுக்கான உணவுகள்,பால் பவுடர்,பால்பாட்டில்கள் தயாரிக்கிறது.


இத்தகைய கம்பெனிகளை கண்காணிக்க இந்திய அரசு ஒழுங்கு முறை கமிட்டிகளை அமைத்திருக்கிறது.குழந்தை உணவு குறித்த ஆய்வுகள், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள்,அதை நடத்தும் மருத்துவமனைகள் குறித்து உண்மையான தகவல்களை கொடுத்து,முறையான அனுமதி பெற்ற பிறகே அத்தகைய ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்பது சட்டம்.அதை நெஸ்லே மீறி இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது..

பொது சுகாதார நிபுணர் டாக்டர் சில்வியா இது குறித்து பேசும்போது' 'நெஸ்லேவுக்கு மார்கெட்டில் நுழைய முயல்வது இது முதல்முறை அல்ல.அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.அவர்கள் ஒழுங்கு செய்யப்படாத குழந்தை உணவு வகைகளை சந்தைப் படுத்த பார்க்கிறார்கள்.

இந்த ஆய்வுகள் எந்த ஒழுங்குமுறை கமிட்டியின் அனுமதி பெறவில்லை.நெஸ்லே ஐ.எம்.எஸ் சட்ட விதிகளை மீறி இருக்கிறது. அவர்கள் சட்டவிதிகளை மதிக்க வேண்டும்,ஏனென்றால் இது பச்சிளம் குழந்தைகள் உணவு' என்கிறார்.

குறைப்பிரசவத்தில் பிறந்து மருத்துவமனையில் ,கிளினிக்கல் கேரில் இருக்கும் குழந்தைகளுக்கு,பிறந்த மூன்றாவது நாளே தாய்ப்பாலுக்கு பதிலாக செயற்கை பாலை கொடுத்து ஆய்வு செத்ததாகக் குற்றச்சாட்டு.

நாட்டின் முக்கியமான சில மருத்துவமனைகளில் 75 குறைப்பிரசவ குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. முழுவளர்ச்சி அடைந்த பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் உடலளவில் உணவுகளை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை குறித்த ஆய்வு இது.

இந்த ஆய்வின் மூலம் தாய்ப்பாலுக்கு பதிலாக  நெஸ்ட்லேயின் தயாரிப்பை ஏற்றுக்கொள்ள பிறந்த மூன்றாவது நாளே குழந்தைகளின் உடல் தயாராகி விடுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.இது குறித்து பி.பி.என்.ஐ இந்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஆய்வு ஒழுங்குமுறை கமிட்டியின் அனுமதியைப் பெறவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.

நாடு நெடுக அனுமதி இன்றி இந்த ஆய்வு நடத்த நெஸ்லேயுடன் ஒத்துழைத்த ஐந்து மருத்துவமனைகளின் பெயர்களும் வெளிவந்திருக்கின்றன. அவை 1,கிளவுட் நைன் மருத்துவமனை ( பெங்களூரு )

2, இன்ஸ்ட்டியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் ( கொல்கொத்தா )

3,மணிப்பால் மருத்துவமனை ( பெங்களூரு )

4,ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை ( புது டெல்லி ) மற்றும்

5,கொல்கொத்தா மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் இந்த மருத்துவமனைகள் மருந்துகள் கட்டுப்பாடு அதிகாரியின் அனுமதி இன்றியே இந்த சட்டவிரோத ஆய்வில் நெஸ்லேக்கு துணை போயிருக்கின்றன.

கடந்த ஜனவரியில் ,தங்கள் குழந்தை உணவுகளை பரிந்துரைக்கும்படி டாக்டர்களை ' கவனிக்க' முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.