முந்திரிக் காட்டுக்குள் 80 பெண்கள்! விடிய விடிய கஞ்சா! திணற திணற ஆபாச நடனம்! போலீசையே அதிர வைத்த ஆரோவில்!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே ஆலங்குப்பம் என்ற பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில்"அரோ டிஜே நைட்" என்ற பெயரில் ஆபாச நடனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


தலைமையாக மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் இதற்கு நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வரை வசூலித்துள்ளார். இதையடுத்து இதில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டவர் மற்றும் வெளியூர்களில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் சிலர் 1000 ரூபாய் கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்துகொண்டு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். 

இதையடுத்து "அரோ டிஜே நைட்"  பார்ட்டியில் இரவு நேரத்தில் ஆபாச நடனம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இந்நிலையில் சம்பவ இடத்தை நெருங்கிய போலீசார் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் முன்னரே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே சென்று அங்கு உள்ளவர்களை கைது செய்துள்ளனர்.

இதில்  ஐ.டி ஊழியர்கள் மற்றும் 15 மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து 80 பெண்களையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர் .இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அருகில் கஞ்சா விற்பனை நடந்து வருவதை அறிந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அருகில் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் சிக்கினர். பெட்ரோமாக்ஸ் லைட் பறிமுதல் செய்யப்பட்டது. பார்ட்டி நடக்கும் இடத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் 80 பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களின் எதிர்கால நிலை குறித்து அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். அதில் உதவி இயக்குனர் ஒருவர் தனது படத்திற்கு இந்த மாதிரியான காட்சி தேவைப்படுகிறது எனவும் அதற்கு முன்னோட்டம் பார்க்க இங்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்தவர்கள் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.