தங்கைக்கு திருமணம்! ஆசையாய் ஊர் திரும்பிய இளைஞன்! குடும்பத்துடன் மண்ணில் புதைந்த துயரம்!

சகோதரியின் திருமணத்திற்காக ஊருக்கு வந்த இளைஞன் குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சம்பவமானது கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் ஒரு ராணுவ அதிகாரியாவார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய தம்பியின் பெயர் ஜிஷ்ணு. சகோதரியின் பெயர் ஜிஷ்ணா. ஜிஷ்ணாவுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயத்த பணிகளை மேற்கொள்ள விடுமுறை எடுத்துக்கொண்டு சென்ற வாரம் விஷ்ணு கேரளாவிற்கு வந்தார்.

சென்ற வாரம் தொடக்கத்திலிருந்தே கேரளாவில் பேய் மழை பெய்து வருகிறது. வயநாடு, ஆலப்புழா, தேக்கடி ஆகிய பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் இப்பகுதிகளில் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் விஷ்ணுவின் குடும்பத்தினரும் சிக்கிக்கொண்டனர். முதலில் வியாழனன்று ஏற்பட்ட நிலச்சரிவில் விஷ்ணுவின் தம்பியான ஜிஷ்ணு மட்டுமே காப்பாற்றப்பட்டு இருந்தார். அடுத்து நேர்ந்த நிலச்சரிவில் குடும்பத்தினர் அனைவரும் மண்ணில் புதைந்தனர். உத்திரடாதி இப்போ வந்த நாள் முதல் பகல் நேரங்களில் மீட்புப்பணிகளிலும் இரவு நேரங்களில் குடும்பத்துடனும் விஷ்ணு தங்கி வந்தார்.

இடர்பாடுகளுக்கு சிக்கிய பலருக்கு உதவ முயன்ற விஷ்ணுவின் குடும்பமே மண்ணில் புதைந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.