காஷ்மீரில் கிடக்கும் கணவனின் சடலம்..! தஞ்சையில் கதறும் மனைவி, பிள்ளைகள்..! நெஞ்சை உலுக்கும் காரணம்!

காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் மாரடைப்பால் இறந்துபோன சம்பவமானது பட்டுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பட்டுக்கோட்டை மாவட்டத்தில் களத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 20 வருடங்களாக ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் சித்ரா. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. மகன் தற்போது படித்து வருகிறார்.

காஷ்மீர் எல்லையில் ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், நேற்று திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தியானது அவருடைய சொந்த கிராமத்தில் பெரிதளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவருடைய உறவினர்களிடம் கேட்டறிந்த போது, "திடீரென்று ராமச்சந்திரன் இறந்த செய்தி எங்களை வாட்டி வதைக்கிறது. அவர் அனைவரிடமும் இனிமையாகப் பழகும் தன்மை கொண்டவர். எப்பொழுது விடுமுறைக்கு வந்தாலும் கிராமத்தில் உள்ள அனைவரையும் நலம் விசாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 

சென்ற முறை விடுமுறைக்கு வந்த போது கூட, ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் அன்பாக கலந்துரையாடினார். மேலும் ஊர் நடவடிக்கைகள் குறித்தும் மிகவும் தன்மையாக கேட்டுக்கொண்டார். 

மேலும் தற்போது கொரோனா பாதிப்பினால், நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமச்சந்திரனின் உடல் வழக்கம் போல அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆனால் இதுவரை இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் எவ்வாறு அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதோ, அவ்வாரே ராமச்சந்திரனின் உடலுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது களத்தூர் கிராமத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.