ராணுவ வீரர் தன்னுடைய சகோதரியின் மகளை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த அக்காள் மகள்..! உள்ளே நுழைந்த மாமனார் செய்த பதைபதைப்பு சம்பவம்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர். இவருடைய வயது 30. இவர் மொஹல்லா மாவட்டத்தில், சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வந்தார். 17-ஆம் தேதியன்று அழகு நிலையத்தில் 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் ரூபிந்தரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மற்றொரு நபர் இறந்துவிட்டதால், அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவத்தில் இறந்தவர் சிங் என்பவராவார். இவருடைய சகோதரியின் மகள் தான் ரூபிந்தர். சிங் ராணுவ வீரராவார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 17-ஆம் தேதியன்று சிங் அழகு நிலையத்திற்கு வந்து ருபிந்திரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதத்தினால் ஆத்திரமடைந்த சிங், தன்னுடைய துப்பாக்கியினால் ரூபிந்தரை சுட்டு கொன்றுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.